அருணகிரி உலா
அருணகிரியார் தமது இறை அனுபவங்களைக் கூறும் பாடல்களைப் படிக்கும்போது அவர் மிகச் சிறந்த அனுபூதிமான் என்பதை உணரலாம், நாம் போற்றும் எண்ணற்ற பெரியோர்கள், இறைவனை மிகப்புகழ்ந்து பாடி, பின் அவன் கருணையைப் பெற்றனர்; ஆனால், முருகன் அருளைப் பெற்று, பின்னர் அவன் புகழைப் பாடியவர் அருணகிரிநாதர். எனவேதான் அவரைப்பற்றிக் குறிப்பிடும்போது ‘‘கந்தர் அனுபூதி பெற்று கந்தர் அனுபூதி சொன்ன எந்தை’’ என்று பாடுகிறார் தாயுமானவ சுவாமிகள்!.
Reviews
There are no reviews yet.