ஐஸ்வர்யம் அளிக்கும் அம்பிகையர்
உற்சாகம், சந்தோஷம், ஆர்வம், முயற்சி, தன்னம்பிக்கை – இவையெல்லாவற்றையும் ஒரே சொல்லில் அடக்கிவிடலாம் – சக்தி! பிரவாகமாகப் பேரருள்புரிபவளே சக்தியான அம்பிகை. ஈசனின் இடது பாகத்தைத் தனக்குரியதாக ஆக்கிக்கொண்டவளும், திருமாலின் இதயத்தில் வீற்றிருப்பவளுமாகிய சக்தி, அவ்விருவரின் பேராற்றலைத் தன் தாய்மைக் கனிவுடன் பக்தர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறாள். பல்வேறு தோற்றங்களில் பரிமளிக்கும் இந்த சக்தியைப் புரிந்துகொள்வதற்கு தேவி உபாசகர்கள் பல வழிகளை மேற்கொண்டிருக்கிறார்கள்; தாம் அறிந்துகொண்டதை நமக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சக்தியாகிய தேவியை வழிபடுவதற்கும் சில பிரத்யேக நடைமுறைகள் உள்ளன. இவற்றை முறைப்படி பின்பற்றவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கின்றன. தேவியின் மென்மைக் குணங்களைப் போற்றி, சக்தியை வணங்கும் எளிமையான வழிபாட்டு முறைகளை விளக்கிச் சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
Reviews
There are no reviews yet.