சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் பாகம் 3
சித்தர்கள் என்றாலே தனி மரியாதை அனைவர் மனதிலும் எழுவது இயற்கை. அந்த சித்தர்கள் பாடாத பொருளில்லை, விளக்காத உண்மைகள் இல்லை. வாழ்வியல், மருத்துவம், விஞ்ஞானம், ஆன்மிகம் என்று எல்லா பொருட்களிலும் தம் அரிய கருத்துகளை விவரித்திருக்கிறார்கள். அந்தவகையில் அவர்கள் பல கோயில்களுக்கும் சென்று அந்தந்த கோயில்களின் அருமை, பெருமைகளை உலகறியச் செய்திருக்கிறார்கள் – நாடிவடிவில். அந்த நாடிகளை அனைவராலும் படித்துத் தெரிந்துகொள்ள முடியாது என்றாலும், அவற்றைப் படித்தறிவதோடு, பாமரருக்கும் புரியும்வகையில் விளக்கிச் சொல்லவும் இறைவன் சில அன்பர்களை இந்தப் பூவுலகிற்கு அனுப்பிவைத்திருக்கிறான். அத்தகையவர்களில் ஒருவர் நாடி ஜோதிட வல்லுநர் திரு கே. சுப்பிரமணியம் அவர்கள். தற்போது அமரராகி ஒரு சித்தரைப் போல சூட்சும உலகில் வாழ்ந்துவரும் அவரது படைப்பின் நிறைவுப் பகுதி இப்புத்தகம்.
Reviews
There are no reviews yet.