பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்
மாலவன் அலங்காரப் பிரியன். அலங்காரப் பிரியனுக்கு உற்சவங்களும் ஏராளம். உலாக்களும் தாராளம். நம்மிடையே மிகவும் பிரபலமான ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவல்லிக்கேணி போன்ற திருத்தலங்களில் வெகு விமரிசையாகப் பிரம்மோற்சவம் போன்ற திருவிழாக்களும், வைபவங்களும் நடைபெறுவதை வருடம் தப்பாமல் கண்டு களித்துதான் வருகிறோம். ஆனால் இந்தப் பிரதான வைணவத்தலங்களுக்கு இணையாகவே வேறு பல திருமால் கோயில்களிலும் சம்பிரதாய விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுதான்வருகின்றன. அந்நாட்களில்தான் என்ன ஒரு கோலாகலம், பக்தர்களிடையே ஆன்மிக நெகிழ்ச்சி… திருமாலுக்கும், அவனுக்குத் தம்மையே அர்ப்பணித்துச் சேவை செய்து பெருமைப்பட்ட அடியார்கள் சிலருக்கும் வைணவ ஆலயங்களில் நடக்கும் விழாக்களின் விளக்கமான தொகுப்பே இந்த நூல்.
Reviews
There are no reviews yet.