108-திவ்ய தேச உலா – பாகம் 3
நேரடியாக அந்தந்த திவ்யதேசக் கோயில்களுக்குச் சென்று, அவர்கள் அனுமதிக்கும் சந்நதிகளைப் படங்கள் எடுக்கச் சொல்லி, அந்தந்த ஊரிலிருக்கக்கூடிய வயது முதிர்ந்த பெரியவர்களிடம் கூடுதல் தகவல் கேட்டு, சந்தேகங்களுக்குத் தெளிவு பெற்று, சில புத்தகங்களை ஆராய்ந்து, விவரம் சேகரித்து, எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். தினகரன் நாளிதழில் சனிக்கிழமை இலவச இணைப்பான ஆன்மிக மலரில் வாரந்தோறும் பிரபுசங்கர் எழுதி, தொடர்ந்து வெளியான 108 திவ்யதேச உலா கட்டுரைகள் லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்று சேர்ந்தது. அவர்களின் ஏகோபித்த கோரிக்கையின் பேரில் ஏற்கெனவே இரண்டு பாகங்கள் வெளியாகி, ஆயிரக்கணக்கான வாசகர்களின் அமோக பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. இந்த மூன்றாவது பாகமும் உங்களுடைய ஆன்மிகப் பசிக்கு ஏற்ற அறுசுவை விருந்தாக அமையும் என்பது திண்ணம். அபூர்வமான புகைப்படங்களும் இந்த நூலுக்கு அழகு சேர்க்கின்றன. பரவசத்தோடு வழிபட வண்ணப்படங்களும் உண்டு
Reviews
There are no reviews yet.