Aasai Aasai Aasai
ஆசை ஆசை ஆசை
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. மோகனா உதயகுமாரன் திருமணத்தின்போது மதிவதனியும் வசீகரனும் சந்தித்து கொண்டனர். அவளுடைய அத்தை மகளுக்கும் அவனுடைய அத்தை மகனுக்கும் திருமணம். அவனுடைய அத்தை மகனான உதயனை அவளுடைய அத்தை மகளான மோகனா திட்டமிட்டு மயக்கி வைத்திருக்கிறாள் என்று நிச்சயமாக நம்பிய வசீகரன் மணப்பெண் தோழிகளை ஏற இறங்கப் பார்த்தான். அதிலும் அவனுடைய சித்தி மகன் ரஞ்சன் அவளுடைய சித்தி மகளான சௌமியின் பின்னே அடிக்கடி செல்வதைப் பார்த்து குடும்பமே இப்படித்தான் போல என்றே முடிவெடுத்து விட்டான். சௌமியும் ரஞ்சனும் நெருக்கமாவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தவே அவன் அடிக்கடி மதிவதனியை சந்தித்தானா அல்லது மதவதனியைக் காதலித்தானா?
Reviews
There are no reviews yet.