Aindhu Naadugalil Arubathu Naal (All Volumes)
ஐந்து நாடுகளில் அறுபது நாள் (அனைத்து பாகம்)
திடீரென்று ஒரு நாள் – சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் காலை – நான் வெளிநாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டு வருவதென்பது நிச்சயம் ஆயிற்று. ஆதி நாட்களில் இந்திய கலாசாரம் பூர்ணமாகப் பரவியிருந்ததாகச் சரித்திர ஆராய்ச்சி பூர்வமாக அறியக் கிடக்கும் நாடுகளான இலங்கை, மலேயா, இந்தோனேஷியா, தாய்லாந்து, பர்மா ஆகிய ஐந்து நாடுகளுக்குச் சென்று அங்கேயுள்ள பழைய சின்னங்களைக் கண்டும், இன்றைய கலாசாரத்தை அறிந்தும், நம் சகோதரர்கள் அங்கே நடத்தும் வாழ்க்கையைப் பார்த்தும் வர ஒரு சந்தர்ப்பம் நிகழ்ந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வ தற்கான சகல வசதிகளையும் தமிழ்ப் பத்திரிகையின் சரித்திரத்திலேயே முதன் முதலாக ஆனந்த விகடன் அதிபர் செய்து தரவே, சுற்றுப் பிரயாணம் ஊர்ஜிதமாயிற்று. என்னுடைய ஒரே குறை அந்த ரேகை சாஸ்திரி அந்தச் சமயம் கண்ணிலே அகப்படாமல் போனது தான். (அவர் தம் தொழிலுக்கு ஏனோ முழுக்குப் போட்டு விட்டதாக நான் அறிகிறேன்!)
Reviews
There are no reviews yet.