Aindhu Vazhi Moonderu Vasal
ஐந்து வழி மூன்று வாசல்
பல நாட்களுக்குப் பிறகு இன்று சூரியனைப் மார்க்க முடிகிறது. பகல் வேளை ஐந்து மணி நேரமே பொந்து போதிலும் வெயில் சுடவில்லை. மேகங்களோ பண்டாயொழிவோ மூடுபனியோ பனிப்புயலோ இல்லாத இந்த வேணையில் நாலாபக்கமும் பரவும் சூரியக் கிரணங்களின் வாயினும் அதன் தொடுகையும் மனதுக்குக் குதூகலம் தருகிறது. நாலாயக்கங்களிலும் தென்படும் காட்சிகளைக் காண்போம். அடர்ந்த நீலவானத்துக்குக் கீழே கற்பூரம் போன்று வெண்பனியால் அடப்பட்டுக்கிடக்கிறது பூமி. கடந்த இருபத்தி நான்கு மணி நேரமாகப் பனிப்பொழிவு இல்லாததால் ஏற்கெனவே பொழிந்து கிடக்கும் பனி உறைந்து கிடக்கிறது. பனிமூடிய இந்தப் பிரதேசம் திசைமுழுக்கப் பரவிக் கிடக்கவில்லை. ஆனால் வடக்கிலிருந்து தெற்காகச் சில மைல் தொலைவு நீண்டு வளைந்த வெள்ளிக்கோடு போலத் தெரிகிறது. அதன் இருமருங்கும் குன்றுகளின் மேல் அடர்ந்து கருமை செறிந்த காடுகள்.
Reviews
There are no reviews yet.