Ambal Anthathi
அம்பாள் அந்தாதி
இங்கே எனக்கு எந்த அருகதை உண்டு? அண்னான் வாலி அவர்கள் படைத்திருக்கும் இந்த வெண்பா நூலைப் பற்றிக் கூறுவதற்கு?
நான்கூட வெண்பாக்கள் எழுதுவேன் என்றாலும் – நான் அறிந்த தமிழ் எவ்வளவு? என் வாழ்நாளில் எத்தனை அறிஞர்களுடைய படைப்புகளை அறிந்திருக்கிறேன்? எவ்வளவு கருத்துக்களை அறிந்தோர் அலசி விவாதிக்க, நேரில் கேட்டிருக்கிறேன் என்றால் – ஒன்றும் இல்லை!
சாதாரளா சினிமாப் பாடல்களிலோ அல்லது பத்திரிகைகளின் தொடச் களிலோ மோனையும் எதுகையும் துள்ளிவரும் அண்ணனுக்கு வெண்பாவில் தானே சொல்லி வருகிறது என்றால், அது – இவர் பாட எடுத்துக்கொண்ட பொருள் தந்த பொருள் அது பொருளுட் பொருளாகப் பொதிந்து நிறைந்திருக்கிறது.
நல்ல புகழில் இருக்கும்போதே, அதைத் தக்க வைத்துக் கொள்வதற்குக் கவனம் செலுத்துவதை விட்டு – இதுபோன்று – நூல்களைப் படைப்பது உண்மையான சரணாகதி அடைந்தவர்களுக்கே சாத்தியமாகும். இதில் நிறைய வெண்பாக்கள் தொடக்கமுதல் இறுதிவரை எங்கும் இடைவெளி விடாமல் (நிறுத்தாமல்) ஒரே மூச்சில் படித்தால்தான் அதன் அழுத்தமும் ஆழமும் செப்பலோசையும் வடிவமும் தெளிவாக விளங்கும். எனக்கு அன்னையைப் பாடும்போதுதான் ஒருமை நிலை தானாக அமையும். அண்ணன் அவர்கள் முருக பக்தர் என்றாலும் அன்னையின் பாடல்களில் அவர் உருகி இருப்பது இந்த ஒருமை நிலையால்தான் என்று எண்ணுகிறேன். இசைஞானி இளையராஜா
Reviews
There are no reviews yet.