Anbenum Thottathiley
அன்பெனும் தோட்டத்திலே
“ஒவ்வொரு மனிதனும் இறைவனின் பிரதிநிதி. அதனால் ஒவ்வொரு மனிதனை யும் நேசியுங்கள். வழிபடுங்கள். மதி யுங் கள். அவனுக்கு என்ன செய்தாலும் அதை ஓர் அழுத்தமான பணிவோடு செய்யுங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் உதவி செய்வதை விட உங்களுக்கு அதிக உதவி கிடைக்கும்.
அவர்களைவிட நீங்கள் அதிகம் வளர்வீர்கள்.” இந்த உலகத்தில் ஒரு விஷயத்தைக் கற்க வேண்டுமென்றால் ஆசிரியராவதைவிட வேறு சிறந்த வழியில்லை . அந்தப் பணியை புனிதமான பணியாகக் கருதுங்கள், மனப்பூர்வமான நேர்மையுடன் பணியாற்றுங்கள். சீரியசாக இருக்க வேண்டும் என்று சொல்ல வில்லை . சீரியசாக இருந்தால் அடுத்த ஆளுக்கு உதவ முடியாது. மனப்பூர்வமாகச் செய்யுங்கள்.
ஆனால் செய்யும் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். அதேசமயம் உங்கள் பணியில் இருக்கும் புனிதத்தை மறந்து விடாதீர்கள். புனிதத் தன்மையும் விளையாட்டுத்தனமான போக்கும் வித்தை.”சந்திக்கும்போது. உங்களிடம் அடுத்தவருக்கு உதவி செய்யும் வல்லமை பிறக்கும். இதுதான் உதவி செய்வதன் ரசவாத வித்தை.”
Reviews
There are no reviews yet.