Bhagavath Geethayin Saramsam
பகவத்கீதையின் ஸாராம்சம்
இந்த நூல் பகவத்கீதையின் ஸாராம்சம், சுவாமி தயானந்த ஸரஸ்வதி அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
தர்மம் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் முக்கிய குறிக்கோளாக இருக்கக்கூடிய ஆனந்தத்தை அடைவதற்கு ஸ்ரீகிருஷ்ணரால் கீதையில் அருளப்பட்டிருக்கும் விஷயமானது மிகவும் முக்கியமானது. ஆத்மாவைப் பற்றிய விசாரமான கீதையின் உபதேசங்களின் ஸாரம் “பகவத் கீதையின் ஸாராம்சம்” என்ற தலைப்பில் வெளியிடப்படுகிறது.
முகவுரை:
தர்மத்தைக் கடைபிடிக்கும் மனோபாவம் மனதினுடைய வளர்ச்சியின் முதற்படி. தனக்கும், பிறருக்கும் எது நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்த போதிலும், அந்த நல்லது என்று சொல்லப்படுகிற தர்மத்தினுடைய மதிப்பு நம்மிடம் பூரணமாக இல்லாவிடில், மற்ற பொருள், இன்பம் போன்ற விஷயங்களுடைய ஆசைகளின் பலம் அதிகரித்து தர்மத்திலிருந்து நழுவ வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதற்காகவே தர்மம் என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயத்தினுடைய மதிப்பையும் பூரணமாக அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக ஏற்பட்ட விசாரம்தான் தர்மத்தின் மதிப்புதான் என்ன? என்ற நூல்.
இந்த தர்மம் மட்டுமல்லாமல் வாழ்க்கையில் முக்கிய குறிக்கோளாக இருக்கக்கூடிய ஆனந்தத்தை அடைவதற்கு ஸ்ரீகிருஷ்ணரால் கீதையில் அருளப்பட்டிருக்கும் விஷயமானது மிகவும் முக்கியமானது. ஆத்மாவைப் பற்றிய விசாரமான கீதையின் உபதேசங்களின் ஸாரம் பகவத்கீதையின் ஸாரம்ஸம்என்ற தலைப்பில் வெளியிடப்படுகிறது.
அவ்வாறே ஸாதனமும், ஸாத்யமும் என்ற புத்தகம் மனிதனுடைய முக்கிய குறிக்கோளை அடைவதற்கு வேண்டிய வழிகளை விசாரித்து போதிக்கின்றது.
ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி
ஆர்ஷ வித்யா குருகுலம், ஆனைக்கட்டி,
கோயம்புத்தூர் – 641 108.
– ஸ்வாமி தயானந்த ஸரஸ்வதி.
Reviews
There are no reviews yet.