Chandrasekharam
சந்திரசேகரம்
பகவான் எதற்காக அவதாரம் செய்கிறான்? நல்ல வர்களை, சாதுக்களை காக்கும் பொருட்டு அவதரிக்கிறான் பகவான் என்பார்கள். ஆனால், ஆழ்வார் சொல்கிறார். பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக் குடம்பும் இனி யாமுறாமை எண்ணின்ற யோனியுமாய் பிறந்தாய்’ என்று. அரைகுறை ஞானம், தீயொழுக்கம், அழுக்கு சேருகின்ற இந்த உடல் இவற்றை மீண்டும் மீண்டும் பெற்று நாம் துன்புறக் கூடாது என்பதற்காக, மீன், ஆமை, வராகம்… என்றெல்லாம் எண்ணற்ற அவதாரங்களை – பிறப்புகளை அடைகிறான் பாகவான். அதாவது, பிறவாப் பெருநிலையை நாம் அடைய வேண்டும் என்பதற்காக, பிறப்பற்றவனாக எம்பெருமான் பிறக்கிறான் என்கிறார் ஆழ்வார்.
Reviews
There are no reviews yet.