Cozhumbu Mudal Almora Varai
கொழும்பு முதல் அல்மோரா வரை
சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் ஒவ்வொன்றும் தனிப் பரிமாணம் உடையவை. இந்த நூலில் நாம் காண்பது அவர் இந்தியப் பாரம்பரியத்தின்மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, அதனை மீண்டும் பெறுவதில் அவருக்கிருந்த அளவுகடந்த ஆர்வத் துடிப்பு இவையே.
1893, செப்டம்பர் 11-ஆம் நாள் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர் பேசினார். அன்று தொடங்கியது ஒரு புதிய யுகம்! சுமார் நான்கு ஆண்டுகள் அங்கே தங்கி, இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக்கொடியைப் பறக்க விட்டார்.
1896, டிசம்பர் 30-ஆம் நாள் தாயகத்திற்குப் புறப்பட்டார். 1897, ஜனவரி 15-ஆம் நாள் இலங்கை வந்தார். அங்கே ஓரிரு சொற்பொழிவுகள் நிகழ்த்திவிட்டு, ஜனவரி 26ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள பாம்பன் வந்து சேர்ந்தார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும், வங்காளம், உத்திரப்பிரதேசம், பஞ்சாப்(தற்போது பாகிஸ்தானிலுள்ள பகுதி), ராஜஸ்தான், கிழக்கு வங்காளம்(தற்போதைய பங்களாதேஷ்) முதலிய இடங்களிலும் பல சொற் பொழிவுகள் நிகழ்த்தினார். அவற்றுள் நமக்குக் கிடைத்த 50 சொற்பொழிவுகளையே இந்த நூலில் காண்கிறோம்.
Reviews
There are no reviews yet.