Dharmathin Mathipputhan Enna?
தர்மத்தின் மதிப்புதான் என்ன?
ஒரு அடியார் குடும்பம், காசிக்குச் சென்று ஈசன் திருவுளையாடலால் அங்கேயே தங்க நேரிடுகிறது. கால ஓட்டத்தில் அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய தர்ம சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தை கற்றுத் தருகிறார் மகளும் வளர்கிறாள்.மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம்.
இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்றுஆனால் மகளோ, பிடிவாதமாக “அப்பா! நான் இறைவன் ஈசன் சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன்.எனக்குத் திருமணம் வேண்டாம்”என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட“அம்மா! நீ பெண். தனியாக வாழ இயலாது.
ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்”என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்” காசி விஸ்வநாதர் மீது ஆணை! என்னை தொந்தரவு செய்யாதீர்கள்” என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். பிறகு, வேறு வழியில்லை என்பதால்,தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, “அம்மா! ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும்,இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்”என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.
Reviews
There are no reviews yet.