Eandru Thanium Intha Suthanthira Thakam
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
சோ எழுதி, நடித்த, “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்ற நாடகத்தை, “டிவி’ வரதராஜன் குழுவினர், மீண்டும் நடத்த உள்ளனர்.இது, புராண நாடகம். தேவலோகத்தில், ஜனநாயக சோஷலிசத்தையும், தேர்தலையும் அரசியல்வாதி அறிமுகப்படுத்தி, தெய்வங்களையே கலங்கடிப்பதாக அமைந்த, அரசியல் நையாண்டி நாடகம்.இந்நாடகத்தில், தற்போது, “டிவி’ வரதராஜன் மற்றும் குழுவினர் நடிக்க உள்ளனர். மார்ச் 21ம் தேதி மாலை, நாரத கனா சபாவில், இந்நாடகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, 22, 24 மற்றும் 25ம் தேதிகளில், இந்நாடக காட்சிகள் இடம்பெறுகின்றன.இதுகுறித்து, வரதராஜன் கூறுகையில், “கடந்த 1970களில்,சோ எழுதி, அவரது விவேகா பைன் ஆர்ட்ஸ் கிளப் குழுவினர் மேடையேற்றிய எந்த நாடகமும், இதுவரை, வேறு எந்த குழுவினராலும் மேடையேற்றப்படவில்லை. இது, எங்களுக்கு கிடைத்த ஐ.எஸ்.ஓ., முத்திரை’ என்றார்.
Reviews
There are no reviews yet.