Enakagavea Nee
எனக்காகவே நீ
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. மனோரஞ்சன் மேற்கொண்டு பேசாமல் ஒரு பெருமூச்சு விட்டான். இஃது அவளுக்குப் பெரும் வேதனையை உண்டுபண்ணியது. அவளைக் காதலிப்பதாகச் சொல்லி தங்களின் திருமணத்திற்குப் பெரியவர்களிடம் சம்மதம் வாங்கினான். அவன் மனதில் என்னென்னவோ ஆசைகள் இருப்பது இயல்புதான். அதன் பிரதிபலிப்பை அவளிடமும் அவன் எதிர்பார்ப்பதும் குற்றமில்லைதான். அவனைக் காட்டிலும் அவளுடைய தந்தை, தாயை அவள் பெரிதாக நினைப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதும் அவள் அறிந்ததே. ஆனால், அவர்களுடைய அருமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
Reviews
There are no reviews yet.