Ennavale Kathal Enbadhu
என்னவளே காதல் என்பது
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சுசித்ராவுக்கும் விபாகரனுக்கும் திருமணம் நடக்கவில்லை. ”இப்படி ஒரு ஜோடி பொருத்தமா?” என்று எல்லோராலும் புகழப்பட்ட ஜோடி ஒன்று சேரப் போவதில்லை. திருமணத்தை நிறுத்தியவன் விபாகரன் தான் என்றாலும் அவளுடைய பெற்றோர் கூட விதியைத் தான் பழித்தனர். தனித்தனியே வேதனையில் துடித்துக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டுமானால் அந்த விதி தான் மனம் வைக்க வேண்டுமா?
Reviews
There are no reviews yet.