Illathavargal
இல்லாதவர்கள்
ஒரு திருட்டுச் சமூகத்தில் ஏழைகளும் திருடுகிறார்கள்; செல்வந்தர்களும் திருடுகிறார்கள். ஒருவனை ஒருவன் ஏமாற்றாமல் வஞ்சிக்காமல் வாழவே முடியாது என்று ஒரு தத்துவத்தை வகுத்துவிட்டார்கள் இந்தச் சமூகத்தில்; இது கெடுக!
மெய்ஞான வளர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் கலைகளின் வளர்ச்சியும் செழித்திருப்பதாய் மெய்யாகவே செம்மாந்து பிரகடனம் செய்யும் இந்தச் சென்னை நகரம், புத்தி வளர்ச்சியற்று, ஒழுக்க வளர்ச்சி குன்றி, உணர்ச்சி மழுங்கி, பகைமையும் வன்முறையும் பொருளற்று வளர்ந்து புழுங்கித் தவிப்பதை அன்றாட வாழ்கையில் தினந்தோறும் உணர்கிறேன் நான்.
சூதுக்கு இரையாகிச் சூறைக்குப் பாழாகும் அந்த ஏழைகளுக்குக் கொதிக்கிற கும்பி உண்டு; எப்பொழுதேனும் எரிந்து புகைகிற அடுப்பு உண்டு; கூனிக் குறுகி முடங்கிக்கிடக்க ஒரு குடிசை உண்டு; ஆனால் அதற்குக் கூரைதான் இல்லை.
இந்தப் பின்னணியில் நான் எத்தனையோ கதை எழுதி இருக்கிறேன். அதில் ஒன்று இது.
Reviews
There are no reviews yet.