Ini Varum Uthayam
இனி வரும் உதயம்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. “அடடா, என்னம்மா குரல் பதறுகிறது? திடீரென்று டெலிஃபோன் என்றதும் பயந்துவிட்டாயா? பயப்பட ஒன்றும் இல்லை. சற்று ஆசுவாசப்படுத்திக் கொள். நல்ல விஷயமாக பேசத்தான் கூப்பிட்டேன். நம் பத்திரிகை விற்பனை பிய்த்துக் கொண்டு போகப் போகிறது பார். அது விஷயமாக உன்னிடம் நேரில் பேச வேண்டும். நாளை ஒர் அரை மணி நேரம் முன்னதாகக் கிளம்பி வந்துவிடுகிறாயா? விஷயம் வெளியே போய்விடாமல் விவரமாகவும் பேச வேண்டும்!” என்றார் அவர். அவர் வேலையைப் பற்றி பேசுவதற்கு அழைத்தது போல் தெரியவில்லையே! வேறு எதற்காக?
Reviews
There are no reviews yet.