J. Krishnamurti Conversations
இந்நூலில், மானுட வாழ்வில் எதிர்ப்படும் பிரச்சினைகள் மற்றும் தத்துவரீதியான கேள்விகள் பற்றி ஜே.கிருஷ்ணமூர்த்தி நடத்திய கலந்துரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. தன் ஆழ்ந்த, ஞானத் தெளிவிலிருந்து தங்குத் தடையின்றி இயல்பாய் அவர் தரும் விளக்கங்கள் புத்துணர்வூட்டுவதாய் அமைந்துள்ளது.
‘அன்றாட வாழ்க்கையை உள்ளொளி ஒளிரும் பாங்கில் நடத்த நம்மால் இயலுமா?’ என்ற அவரின் கேள்வி, சிந்திக்க வைப்பதாக உள்ளது.
‘சமயம், வாழ்க்கையிலிருந்து வேறுபட்ட ஒன்றல்ல; மாறாக, அது வாழ்க் கையேதான்’ என்ற அவரின் கூற்று, உலகாயத வாழ்விற்கும், சமய வாழ்விற்கும், பிரிவேதும் கற்பிக்காத, வாழ்க்கையைப் பற்றிய அவரது முழுமையானக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது.
Reviews
There are no reviews yet.