Judgement Reserved
ஜட்ஜ்மெண்ட் ரிட்சர்வ்ட்
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியபோது அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை தனது ‘ஸ்டைலில்’ சமாளித்தார் துரைமுருகன்அவர் கூறுகையில், நீதிமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிகளில் அந்தந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அழைப்பிதழில் போட வேண்டும், அவர்களை விழாவுக்கு அழைக்க வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். அதை திரும்பவும் வலியுறுத்துவோம். நீதிபதிகள்தான் நமக்கு ஆணை போடுகிறார்களே தவிர நாம் ஆணை பிறப்பிப்பது இல்லை.தலைமை நீதிபதியை வரும் 2 நாட்களில் சந்தித்துப் பேசும்போது உறுப்பினர்களின் கருத்தை வலியுறுத்துவேன். 14 வருடமாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாக உறுப்பினர் கூறினார். நிறைய கோர்ட்டுகளை உருவாக்கியும் சில நேரங்களில் வழக்குகள் தேங்குகிறது.
Reviews
There are no reviews yet.