Kadhalenum Theevinile
காதலெனும் தீவினிலே
கதை சொல்லியாக ஒருவரை பற்றிச் சொல்ல முற்படும் போது தொடக்கம் முதல் இறுதி வரை சொல்வது ஒருவகை என்றால் ஒரு மனிதனின் குணநலத்தை எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையை விவரிப்பது மற்றொரு வகை.ஏதோ ஒரு காரணத்திற்காகக் கிராமத்திற்கு வரும் சம்ஹிதாவிற்கு நல்லவர்கள் சிலபேர் உதவி செய்கின்றனர்.அவள் யாருக்கோ காத்திருப்பது போலத் தெரிகிறது.அதை மெய்யாக்க அமெரிக்காவில் இருந்து அவளின் நண்பன் அபிஷேக் வந்து சேர்கிறான்.டாக்டரான அபிஷேக் அங்கே மலைவாழ் ஜாதியான அப்பாச்சீஸ்களுக்கு உதவப் போக அரசாங்கத்தால் தூக்குத் தண்டனை கைதியாகிறான். அங்கே இருக்கும் உயர் அதிகாரியின் உயிரை ஒரு சந்தர்ப்பத்தில் காப்பாற்றியதால் கடைசி விருப்பமாகத் தன் முன்னோர்கள் வாழ்ந்த பூமியை பார்க்க இந்தியா வர அனுமதிக்கபடுகிறான்..வந்தவன் ஒருமாதம் கிராம வாழ்வில் தன்னைத் தொலைத்து கிளம்பும் நாள் அன்று வந்த கடிதத்தில் அவன் இனி சுதந்திர பறவை என்று சூசகமாகத் தெரிவிக்கத் திரும்பவும் மலைவாழ் மக்களை நோக்கி செல்கிறான்.
Reviews
There are no reviews yet.