Kannigal Ezhu Per
கன்னிகள் ஏழுபேர்
பிரபலமான சிவாலயங்களில் எல்லாம் தெற்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி காணலாம். சிவாலயத்தில் கருவறைக்குள் லிங்க சொருபத் தோடு ஈசன் இருக்கும் பொழுது அந்தக் கருவறையைச் சுற்றியுள்ள சுவரில் வெளிப்பக்கமாக தெற்குப் பார்த்து தெட்சிணாமூர்த்தி என்கிற பெயரில் இறைவன் சிவன் அமர்ந்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழலாம். அப்படியே நேர்பின்னால் திருமாலாலும், பிரம்மனாலும் அடிமுடி காணமாட்டாத நிலையில் லிங்கோத்பவராகவும், வடக்குப் பக்கம் துர்க்கையாகவும் அதே ஈசனின் அருள் வெளிப்படுவதையும் பார்க்கலாம். இங்கே இந்த தட்சிணாமூர்த்தி கோலம் என்பது குருவின் கோலம். அதாவது ஞானமளிப்பது. வடதிசை என்பது குபேரதிசை…. வாழ்க்கைக்குத் தேவையான செல்வங்களில் பொருட்செல்வமும் ஒன்றல்லவா? அதை நல்கும் திசை….. அந்தத் திசையில் தான் குபேரபுரி இருக்கிறது. தெற்குத் திசையில் அதை நோக்கி தட்சிணா (தென்பகுதி ) மூர்த்தியாக ஈசன் அமர்ந்திருப்பதன் நோக்கம் அருட்செல்வத்தை வாரி வழங்குவதற்காக.
Reviews
There are no reviews yet.