Kavignaniyum Kalaignaniyum
கவிஞானியும் கலைஞானியும்
கவிஞர் வாலி அவர்கள், நான் இயக்கிய பல படங்களுக்கு பல விதமான பாடல்களை எழுதியவர். அது மட்டுமல்ல, என் இரு படங்களுக்கு வசனமும் – ஆம் ‘வசன கவிதை’ எழுதியவர். எங்கள் நட்பு கடல் ஆழத்தை விட அதிகம். அதனால்தான் நான் வேண்டிக்கொண்டதால், இனி ‘குடிக்க மாட்டேன்’ என்று என்னிடம் சத்தியம் செய்தார். அன்றுமுதல் குடிக்காமல் வாழ்ந்து, சத்தியத்தைக் காப்பாற்றினார். இன்று குடிப்பவருக்கு, வாலி ‘சத்தியம்’ ஒரு பாடம்.
நான் இயக்கி, உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து, இசைஞானி இளையராஜா இசையமைத்து, கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் பலப்பல – அதில் சில…
ஏவி.எம்மின் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் ‘Happy New Year’ – ‘இளமை இதோ இதோ’ – பாடல் வந்து பல வருடங்கள் ஆகி விட்டன. ஆனால், இன்றும் அதுதான் புது வருடப் பாடல் என்றுமே அதுதான்.ஏவி.எம்மின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில், ‘நானாக நானில்லை தாயே’ – தாயைப் பற்றிய உருக்கமான பாடல் – இது ‘பதம்’! கவிஞர் வாலியின், கமல்ஹாசன் திரைப்பாடல் தொகுப்பு நூலுக்குள் போனால், ஒரு பானை சோறு கிடைக்கும்.
Reviews
Clear filtersThere are no reviews yet.