Kottaipurathu Veedu
கோட்டைபுரத்து வீடு
மாசில் வீணைக்கும் மாலை மதிக்கும் வீசிடும் தென்ற லுக்கும் அறிமுகமா தேவை?’கோட்டைப்புரத்து வீடு’ என்னும் இந்த நாவலும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். ‘ஆனந்த விகடனில் 31 வாரங்கள் தொடராக வெளிவந்த பொழுது, இந்தப் புதினத்தை ஆவல் பொங்க, ஆர்வம் மிக்குற, நெஞ்சம் துடிக்க பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் படித்து மகிழ்ந்தார்கள். இது உபசாரத்துக்குச் சொல்கிற வார்த்தை அல்ல, அப்படிப் படித்த பலரை நான் அறிவேன். இன்னும் சொல்லப்போனால், எந்த ஒரு நாவலையும் அது தொடராகப் பிரசுரமாகும் பொழுது படிக்கிற பழக்கமே இல்லாத (படு சோம்பேறியான) என்னையே இது படிக்க வைத்து விட்டது என்பது நிஜம்.ஒரு காலத்தில் மன்னன் ஆட்சியே சிறந்ததென்ற கோட் பாடு உலகெங்கும் நிலவியிருந்தது. ‘மன்னன் உயர்த்தே மலர் தலை உலகு’, என்றார்கள். நாளாக ஆக, மன்னர் ஆட்சியின் கட்டுக்கோப்பில் விரிசல் விழுந்தபோது, குறுநில மன்னர்க ளென்றும் ஜமீன்தார்களென்றும் மிட்டாதாரர்களென்றும் தலையெடுத்தார்கள். நிலப்பிரபுத்துவத்தின் கொடுங்கோன்மைகளைக் காட்டி, ஏதுமறியாக் குடிமக்களின் ராஜவிசுவாசத்தையும் எளிமையையும் பாமரத் தன்மையையும், தங்கள் சுயநலத்துக்கும் வெறிக்கும் பலியாக்கும் கயமையாக ஆட்சி மாறியது. அந்தக் காலக்கட்டத்தைத்தான் இந்த நாவல் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
Reviews
There are no reviews yet.