MalaikkottaI Kavignarum Makkal Kalagnarum
மலைக்கோட்டை கவிஞரும் மக்கள் கலைஞரும்
காவியக் கவிஞர் வாலி அவர்களின் திரைப்படப் பாடல்களின் முதற்தொகுப்பு கவிஞர் வாலியின் தெரிவு செய்த ஆயிரம் பாடல்களைக் கொண்டு ‘வாலி – 1000’ என்ற தலைப்பிலே அவராலேயே வெளியிடப்பெற்ற பாக்கியம் பெற்றது. மற்றவை ஆண்டுதோறும் கவிஞர் வாலி விழாவில் நடிகர்கள் வாரியாக தொடர்ந்து வாலி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டு வருகிறது. இத்தொகுப்புக்களை மேற்கொண்டதில் கவிஞர் வாலியின் பாடல்களை நேசித்ததோடு சுவாசிக்கவும் தொடங்கிவிட்டேன். அவரது பாடல்கள் ஒன்றுக்கொன்று மேம்பட்டிருந்ததால் உளமார எது மிகச் சிறந்தது என்றே அடையாளப்படுத்த முடியவில்லை. ‘தொட்டதெல்லாம் பொன்னா கும்’ என்ற பழமொழியை அன்று படித்தேன், இன்று கவிஞர் வாலியின் பாடல்களில் பார்த்தேன்.
கவிஞர் வாலியின் கவித்துவத்தையும் வார்த்தை வித்தகத் தையும் மக்களிடையே தொடர்ந்து அயராது பரப்பி வரும் கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் இலக்கியப் பணி அன்புக்கும் நன்றிக்கும் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது.
Reviews
There are no reviews yet.