Mayaman Malai
மாயமான் மலை
மாத நாவல்களை ஒரு உதிர்ந்து விழும் இலைச் சருகு போல சிலர் நினைத்துக் கொண்டிருக்க, பலரோ அவ்வளவும் தங்க இலைகள் என்பது போல அதன் மேல் ஒருவித பிரமையோடு இருப்பதைப் பார்த்தேன். குறிப்பாக எனது மாத நாவல்கள் சமீப காலத் தில் வாசகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவது எனக்கு மிகுந்த ஆச்சரியம் தருகிறது. சமீப நாட்களில், அதுவும் டிவி தனது ஆதிக் கத்தில் தமிழ் மக்களை தன்வசப்படுத்தியுள்ள இந்த சமயத்தில், படிக்கின்ற பழக்கம் கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைந்து முற்றிலும் அழிந்து ஒழிந்து கூடப் போய்விடும் என்றுகூட நான் சில சமயம் நினைத்த துண்டு . as ஆனால் என்னுடைய அந்தக் கருத்து தவறானது என்பதை எனது நாவல்களுக்கான வரவேற்பில் உணர்ந்து கொண்டேன்.
Reviews
There are no reviews yet.