Mele Uyare Uchiyile Part 1
மேலே உயரே உச்சியிலே பாகம் 1
கோட்டைப்புரத்து வீடு, மர்மதேசம், ஓடாதே கருப்பா போன்ற தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்த எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் மற்று மொரு வெற்றிப்படைப்பு ‘மேலே உயரே உச்சியிலே!’ ஒரு தினசரியில் தினமும் தொடராக வந்து தினமும் விறுவிறுப்பு வேகம் என வாசகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாவல் இப்போது நூலுருவில் உங்கள் கரங்களில் தவழ்கிறது. படிக்க கையில் எடுத்துவிட்டால் முழுவதும் படித்து முடிக்காமல் நாவலை கீழே வைக்க முடியாது என்பதுபோல் கதையின் வேகமும் விறுவிறுப்பும் மேலே உயரே உச்சியிலே செல்வதை படிப்பவர்கள் உணர்வார்கள். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தேவநாதன் 24 வயது இளைஞன். கஷ்டப்பட்டு படித்து முதல் வகுப்பில் தேறி பட்டம் வாங்கிய வேலையில்லாத லட்சக்கணக்கான இளைஞர்களில் அவனும் ஒருவன். அன்னை மீனாட்சியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். பெரிய குடும்பம். இரண்டு அக்காள், இரண்டு தம்பி, தந்தை அருணகிரிக்கு மில்லில் உத்யோகம். உடனடியாக ஏதாவது ஒருவேலை தேடிக்கொண்டால்தான் குடும்பக் கஷ்டத்தை ஓரளவாவது குறைக்க முடியும் என்ற நிலை.
Reviews
There are no reviews yet.