Mister Vedaantham (Both Volume)
மிஸ்டர் வேதாந்தம் (இரண்டு பாகம்)
அதாவது 1984-85 வாக்கில், சிறந்த கதையம்சம், நிறைந்த ஹாஸ்யம், உயர்ந்த பண்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்ட எஸ்.வி.வி.யின் எழுத்துக்களை மெதுவாக வெளியிடத் தொடங்கினோம். நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மேலேயே, வாசகர்களின் வரவேற்பு நன்றாக இருந்தது. பிறகு எஸ்.வி.வி.யின் பெரும்பாலான தமிழ், ஆங்கில நூல்களை வெளியிட்டோம்.அப்போதுதான் எஸ்.வி.வி.யின் தொடராக முதலில்பிரசுரித்த ஆனந்த விகடன் அதிபர் திரு எஸ் எஸ். வாசன் அவர்களின் புதல்வர் திரு.எஸ். பாலசுப்பிரமணியன், எஸ்.வி.வி.யின் நூல்கள் மறுபடியும் வந்துவிட்டது’ என்ற சிறு வாசகம் ஒன்றை விகடனில் அறிவித்தார். அது ஒரு பெரிய விளம்பரமாக ஆகிவிட்டது. உடனே பல வாசகர்கள், ‘எஸ்.வி.வி.யின் நூல்களைப்போட்டது போல் ஏன்’தேவன்’ புத்தகங்களைப் போடக் கூடாது?” என்று கேட்ட வண்ணமாயிருந்தனர். ‘லக்ஷ்மி’ : ஆப்பிரிக்கா தேவன் பயணமாகுமுன் சுமார் 15 ஆண்டுகள் அவர்களோடு எழுத்தாளர், ஆசிரியர் என்ற முறையில் பழக வாய்ப்பிருந்தது. என் எழுத்துக்களில் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தம் செய்வார். என் கதைக்கு வந்துள்ள கடிதங்களை அனுப்பி உற்சாகப் படுத்துவார். பேசும் நகைச்சுவை பொழுது கொப்பளிக்கும். “உங்கள் கதையில் முதல் அத்தியாயத்திலேயே விருவிருப்பு வரவில்லை என்று வாசகர் குறை கூறியிருக்கிறாரர்? கவலைப் படாதீர்கள். அடுத்த அத்தியாயத்தை எழுதும்போது கதாநாயகன் அலமாரியில் கை வைத்தான். தேள் கொட்டி விட்டது…என்று விருவிருப்பாக ஆரம்பியுங்கள்” என்று வேடிக்கை செய்வார். அவர் எழுதிய கதைகளில் நகைச் சுவையைப் போல பக்திச் சுவையும் பரிமளிக்கும்.
Reviews
There are no reviews yet.