Moongil Kaatu Nila
மூங்கில் காட்டு நிலா
இந்தத் தலைப்பில் ஒரு கவிதை எழுத வேண்டும் என்றுதான் முதலில் எனக்கு ஆசை ஏற்பட்டது. பின்னர் இந்தத் தலைப்பு ஓர் ஓவியத்துக்கு ரொம்பப் பொருத்தம் என்று நினைத்து விட்டுவிட்டேன். ஆனால் அடிக்கடி நிலாக் காலங்களில் இந்தச் சொற்றொடர் ‘நிலா காட்டு நிலா – மூங்கில் காட்டு நிலா’ என்று மலரும்.
நிலச் சொத்துடைமைச் சமூகத்தில் – அதுவும் இக்கால நவீன ஒடுக்குமுறைகளும் சேர்ந்து வர்க்கப்பேதம் பாராமல் மானுட உணர்வுகளை நசித்துப் போடுகிறது என்று காட்ட எவ்வளவோ கதைகளைப் புனைந்து எழுதலாம். அந்த அளவு யதார்த்த வாழ்வில் ஒருவன் சாவில் இன்னொருவன் லாபம் அடைகிற நடைமுறைக் கொடுமை பற்றி நாம் யோசித்தல் வேண்டும். அந்த வரலாற்று நினைவும் அதற்கு இணையாக அண்மையில், இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில் ராமநாதபுரம் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயப் பெண்களைப் பற்றிய வீரமிகு செய்திகளும் இதை எழுதத் தூண்டின. இவையெல்லாம் புறக் காரணங்களே ஆயினும், இவற்றில் ஆழ்ந்துள்ள மானிட உணர்ச்சிகளின் மேன்மைகளே இதை இலக்கியமாக்குகின்றன.
Reviews
There are no reviews yet.