Nagadevi
நாகதேவி
சோழர்களின் பேரரசை நிறுவிய ராஜராஜ சோழனும், அதை வளர்த்து விஸ்தரித்த ராஜேந்திர சோழனும் மத விவரத்தில் கொண்டிருந்த பரந்த நோக்கத்தின் காரணமாக நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரம் என்ற பெயரில் புத்த விஹாரமொன்றைக் கட்ட ஸ்ரீவிஜயத்தின் சைலேந்திர வம்ச சக்கரவர்த்தியான ஸ்ரீமாற விஜயதுங்கவர்மனுக்கு அனுமதியும் இடமும் அளித்தனர். அந்த விஹாரத்தைப் பரிபாலிக்க மான்யமும் அளித்தனர்.ஆனால் சைலேந்திர மன்னன் அந்த விஹாரத்தை நிர்மாணித்தது மத பக்தியாலல்ல. நாகப்பட்டினம் அந்தக் காலத்தில் கிழக்கையும் மேற்கையும் பிணைத்த ஒரே துறைமுகம். ஆகையால் தங்கள் வாணிபத்துக்கு ஒரு துறைமுகம் தேவை என்ற காரணத்தினால்தான் சைலேந்திர மன்னன் அங்கு விஹாரம் கட்டினான்.
Reviews
Clear filtersThere are no reviews yet.