Nayakkar Maligai
நாயக்கர் மாளிகை
தரையெல்லாம் சலவைக்கற்கள்! ராஜஸ்தானுக்கே லாரிகளை அனுப்பி நேராக சென்று வாங்கி வந்தார். மாளிகைக்குள் உள்ள மரங்களுக்காகவே ஒரு கப்பல் நிறைய மரத்துண்டுகள் தூத்துக்குடி துறைமுகத் திற்கு வந்தது. இப்படி பார்த்துப் பார்த்து கட்டிய மாளிகை அது. இருந்தும், கிருகப்பிரவேசத்தின்போது ஒரு விபரீதம் போல நாயக்கரின் பட்டு வேட்டியில் தீ பிடித்தது!
தன்னந்தோப்பில் தென்றல் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. அருகிலேயே ஆவென்று அரக்கனின் வாய்போல வட்டக்கேணி. அதில் தளும்பத் தளும்பத் தண்ணீர். அதன் ஒரு ஓரமாய் பம்ப் செட்டை உள்ளடக்கிய அறை. அறை முகப்பில் கயிற்றுக்கட்டில் ஒன்று கிடந் தது. பக்கமாய் ஒரு பிளாஸ்ட்டிக் மோடோ.
Reviews
There are no reviews yet.