Nesa Mugam Marakkalaamo?
நேச முகம் மறக்கலாமோ?
சாதனாவின் தந்தை வந்து பேசி விட்டுப் போன பின்பு குணசேகரனுக்கு அவர் பேசியதில் தவறேதும் இருந்த மாதிரித் தோன்றவில்லை.சாதனா அவனுடைய செயலாளர்..அழகும் சாமர்த்தியமும் உள்ளவளே.. அவளை மணந்துக் கொண்டால் இப்போது வாழும் வெறுமையான வாழ்க்கை மாறி நன்றாகத்தான் இருக்கும் என்றே தோன்றியது. ஆனால் அதற்கு முன் செய்ய வேண்டிய பெரிய வேலை ஒன்று இருந்ததே !அது தான் ஐந்து வருடங்களாகக் கண்ணால் கூடப் பார்க்காத மனைவி திலோத்தமாவை விவாகரத்து செய்யும் கடமை. என்ன அவளைப் பார்த்த பின் வாய் திறந்து விவாகரத்து கேட்கக் கூட முடியவில்லை
Reviews
There are no reviews yet.