Nija Govindam
நிஜ கோவிந்தம்
கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 – 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி, திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள், சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், ‘கையளவு மனசு’ என்ற தொலைக்காட்சித் தொடரிலும், வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
Reviews
There are no reviews yet.