Oru Mul Oru Malar
ஒரு முள் ஒரு மலர்
சென்னை குமுறிக் கொண்டிருந்தது! வானில் மழை மேகம் போர்வையை விரித்திருக்கும் நிலையில், அங்கங்கே மின்னலின் கரகாட்டம்!டி.வி. நியூஸிலும் மிரட்டிக் கொண்டிருந்தார்கள். பலத்த மழை நிச்சயம். தொடர்ந்து சுனாமி, நிலநடுக்கம் என்று எல்லாமே சர்வ நிச்சயம்’ என்பது போல் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.அதைக் கேட்டபடி இருந்தாள் சுவாதி.இருபத்தி நான்கு வயது பூங்கொத்து… சோஃபாவில் சர்வ சாதாரணமாய் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்தாள். அவள் தலைக்கு மேல் மின்விசிறியின் மந்தமான சுழற்சி. கூடவே க்ரக்… க்ரக்… என்கிற அதன் மின்சார பாஷை அண்ணாந்து பார்த்தவள் எழுந்து சென்று ஒன்றில் இருந்ததை நான்குக்கு மாற்றி.
Reviews
There are no reviews yet.