Palaya Kanakku
பழைய கணக்கு
வாராவாரம் தொடர்ந்து சாவி பத்திரிகையில் இந்தப் பழைய கணக்கின் பல பகுதிகளை நான் பார்த்திருக்கிறேன். அப்பொழுது தனித்தனிக் கட்டுரையாக வாசித்தபோது சுவையாக இருந்த அந்தக் கட்டுரைகள் இப்பொழுது ஒரு புத்தகமாகப் படிக்கிற போது இன்னும் அதிகமான சுவையோடு ஒரு சுயசரிதை என்கிற பரிமாணத்தில் நம் மனக் கண் முன் சம்பவங்களாக விரிகின்றன. புள்ளி விவரங்களையும், தேதிக் குறிப்புகளையும் அடுக்கிக் கொண்டே போய் சம்பவங்களை அகராதி மாதிரி வரிசைப் படுத்திக் கொண்டே போனால்தான் சுயசரிதையா? இந்தப் பழைய கணக்கும் ஒரு வகை சுயசரிதைதான்!
கல்கியின் எழுத்தில் நான் மனதைப் பறி கொடுத்தவன். அதன் பயனாக அவரை என் மானசீக குருவாகக் கொண்டவன். அவருடைய எழுத்தும், எதையும் நகைச்சுவையோடு சொல்லு கின்ற பாணியும், சரளமான நடையும் என்னைக் கவர்ந்த தன் பயனாக அந்தப் பாதிப்பு என் எழுத்துக்களில் பிரதிபலித்தது. போகப்போக கல்கியின் நடையைப் போலவே என் எழுத்தும் அமைந்துவிட்டது.
Reviews
There are no reviews yet.