Pallisaamiyin Thuppu
பல்லிசாமியின் துப்பு
மிஸ்டர் பல்லிசாமிக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது ஒரு பெரிய மர்மம். நாம் அந்த மர்மத்தைப் பின்னால் துலக்குவோம். இந்தக் கதையின் ஆரம்பத்தில் அவர் மேஜையின் மேல் உட்கார்ந்து நாற்காலி மேல் காலை உதைத்துக் கொண்டார். துப்பறியும் நிபுணரான பல்லிசாமி சாதாரண மக்கள் செய்வதற்கு நேர் எதிரிடையாகக் காரியங்கள் செய்தால்தான், சாதாரண மக்கள் கண்களில் படாத மர்மங்களைக் கண்டு கொள்ளும் மனப்பான்மை உண்டாகும் என்று நம்புபவர்.
Reviews
There are no reviews yet.