Parisukku Po
பாரிஸுக்கு போ
பாரிசில் இருந்து சென்னை வரும் சாரங்கனில் இருந்து தொடங்கும் கதை விமானநிலையத்தில் வரவேற்கும் லலிதா , மகாலிங்கத்துடன் இணைந்து கதை நகர்கிறது.
சாரங்கன் எனும் ஒரு புரட்சிகர கலைஞனின் லட்சியம் அவனின் ரசனை அவனின் வாழ்க்கை, இசை,கலை மற்றும் பண்பாடு குறித்த பார்வை மிகவும் ஆழமாக Jk பதிவிடும் அதே நேரத்தில் சாரங்கனிடம் முரண்படும் பாத்திரங்களின் நியாத்தை பதிவிடும் முறை சிறப்பு.
சாரங்கனிடம் ஏற்படும் காதல் மற்றும் தெய்வம் போல் மதிக்கும் அன்பு கணவனெனக் இரண்டுக்கும் ஊடே சிக்கி தவிக்கும் லலித்தா ஒரு முடிவை எடுக்கும் சூழலை அழகாக கையாண்டிருக்கிறார்.
இது போல் கதையில் வரும் அனைத்து பாத்திரங்களும் தன் பக்கத்து நியாயங்களை நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கும். ஒரு லட்சிய இசை கலைஞனை தன் அன்பு கரங்கள் கொண்டு அணைக்கும் மற்றோரு லட்சிய வாதியிடம் கொண்டு சேர்த்துவிட்டு கதையை முடித்தது மனதில் ஒரு நிம்மதியை வாசித்து முடிக்கும் போது தருகிறது.
மனித மனங்களுக்குள் நடக்கும் உரையாடல் jk எழுத்தின் தனி சிறப்பு. பிடித்த வரிகள் :- “நம்மிடம் மாபெரும் தீய குணம், நாம் எதையுமே கோயிலாக்கி விடுவது; எவரையுமே தெய்வமாக்கி விடுவது… எனவே நாம் வழிபடுவதிலேயே சமர்த்தர்கள்; வளர்வதில் இல்லை” “கலையின் மகத்துவமே அதுதான்.
அறிந்து கொள்ள முடியாத விஷயங்களையும் அது உணர்த்திச் செல்லும்”
Reviews
There are no reviews yet.