Pon Mahal Vandhal
பொன் மகள் வந்தாள்
இது ஒரு வித்யாசமான நாவல்!பழமையும் புதுமையும் கைகுலுக்கிக் கொள்ளும் ஒரு மாறுபட்ட களத்தில் அமைந்த நாவல்.படிப்பவர்கள் குறைந்து போய் பார்ப்பவர்கள் அதிகரித்து விட்ட ஒரு காலகட்டத்தில் நான் எழுத்தாளனாக உலாவிக் கொண்டிருப்பதால் இருக்கின்ற படிப்பவர்களை தக்கவைத்துக் கொள்ள மிகவும் மெனக்கெட வேண்டியுள்ளது. அப்படி மெனக்கெட்டு எழுதிய ஒரு நாவல் இது என்றும் சொல்லலாம். நீங்கள் மெனக்கெடாமல் உங்கள் விருப்பத்திற்கான கற்பனைகளை எழுத்தாக்கினால் அது எவ்வளவு தூரம் வாசக உலகினை சென்றடையும் என்று சொல்லுவதற்கில்லை.சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு வாசிப் பவர்களை பற்றி கவலையே கிடையாது. தான் எழுதுவதே எழுத்து அதை நாலே நாலு பேர் படித்தால் கூட தனக்கு அது போதும் என்று எழுதும் அவர்களைப் போல என்னால் எண்ண முடியவில்லை .
Reviews
There are no reviews yet.