Pulamayum Ilamayum
புலமையும் இளமையும்
வாலி அவர்களின் பாடற்சிறப்புகளைத் தொகுத்த வரையில் என் சக்திக்கேற்ற அளவில் புரிந்து கொள்ள முடிந்தது. வாலி தனது பாடல்களில் சொல்ல வந்த சங்கதிகளைச் சந்தங்களில் கொண்டு வரும் பாங்கு, ஆர்ப்பரிக்கும் கடலலையென முட்டி மோதும் எதுகை மோனைகளின் அழகு, அதில் சங்கமித்த கருத்துச்சுவை அட்டா வர்ணிக்க வார்த்தையில்லை. கலை இருக்கும் வரை வாலி புகழ் நிலைத்திருக்கும்.
வாலி என் அண்ணன். ஓவியக் கல்லூரியிலும் எனக்கு முன்னோடி: திரையுலகிலும் எனக்கு முன்னோடி செந்தூரப் பொட்டும் சிரிப்பும் அவர் சொத்து. ‘நான் தொழிலில் வென்று வாழ்க்கையில் தோற்றவன்” என்று ஒரு பேட்டியில் தன்னைப்பற்றி வாலி சொன்னார். எல்லாம் பெற்றவன் என்று இவ்வுலகில் எவனும் இல்லை என்பதை அவரும் அறிவார். என் நூல் வெளியீட்டு விழாவில் என்னையும் என் துணைவியையும் வாழ்த்தி என் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்ட என் மூத்த சகோதரர் வாலி, அவதாரபுருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ணவிஜயம் போன்றவை காலம் கடந்தும் அவர் புகழை நிலைநிறுத்தும் படைப்புகள்.
-சிவகுமார்
Reviews
There are no reviews yet.