Rajathin Manoratham
ராஜத்தின் மனோரதம்
வீடு கட்டுவது சுலபம். செங்கல், சிமெண்ட்,ஜல்லி, இரும்பு, நகை, கடன் என்று கலவையாக உருட்டித் திரட்டி ஒரு வீட்டை உருவாக்கிவிடலாம். ஆனால், கட்டிய வீட்டை ஓர் இல்லமாக மாற்றுவது அத்தனை சுலபமல்ல.அதென்ன, இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா? கிடையாது. வீடு என்பது அறைகளும் கதவுகளும் கொண்டஒரு கான்க்ரீட் இருப்பிடம். வீடு, இல்லமாக மாறவேண்டும் என்றால் முதலில், குதூகலம் குடிபுக வேண்டும். அதனால்தான், வீடு கட்டுவதைப் பற்றிய இந்த நாவலில் செங்கல்,மணல், ஜல்லியை விட அதிகமான அளவில் நகைச்சுவையைப் பயன்படுத்தியிருக்கிறார் தேவன். நிஜமாகவே நீங்கள் ஒரு வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்றால்’சொர்க்கத்தின் சொந்தக்காரர்’புத்தகத்தைப் படியுங்கள். வீடு கட்டும் அனுபவத்தை ரசித்து ரசித்து அனுபவிக்க விரும்பினால் உங்களுக்கு இந்நாவலைத் தவிர வேறு விருந்து கிடையாது!
Reviews
There are no reviews yet.