Rudra Veenai Part 1
ருத்ரவீணை முதல் பாகம்
யேசுநாதர்கூட, வற்றாத உணவு தரும் ஒரு ‘பௌல்’ (கிண்ணம்) வைத்திருந்தார் என்றும் அது இன்றும் இந்த உலகில் எங்கோ இருப்பதாகவும் அதைத் தேடி பலர் திரிவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். இது மேற்கத்திய கற்பனை அல்லது நிஜம் என்றால் ருத்ரவீணை நமது நாட்டு கற்பனை அல்லது நிஜம்.அப்படிப்பட்ட ஒரு வீணை இன்றும் இருந்து அது மனிதனுக்கு தெரிய வந்தால் என்னாகும் என்கிற கற்பனையில் உருவானதுதான் இந்த ருத்ரவீணை நாவல்.
தொலைக்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கா னோரைக் கொள்ளை கொண்ட இந்த நாவல் அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து, பொங்கிய காவிரி போல என்னுள் பாகம் பாகமாக பெருக்கெடுத்து விட்டது. உங்கள் கையில் இருப்பது முதல் பாகம் மட்டுமே. மற்ற பாகங்கள் தொடர்ந்து அணி வகுக்கும். பதிப்பகத் துறையில் ஒரு புது வேகத்துடன் நுழைந்திருக்கும் திருமகள் நிலையம் தயாரிப்பான இந்த நூலை வாசக உலகம் நன்கு வரவேற்கும் என்று நம்புகிறேன். அரிய நல்ல கருத்துக்களைக் கூறி ருத்ரவீணை வழி வகுத்தது. சரித்திரம், சமூகம் என்று இரு விதமாக சிந்தித்து புதுமையாக செயல் படவும் இது இடமளித்தது.
Reviews
There are no reviews yet.