Rudra Veenai Part 2
ருத்ரவீணை இரண்டாம் பாகம்
தோடிபுரம் வயல்வெளியில் நாற்று நடும் பணி ஒரு புறமும், களை எடுப்பது ஒரு புறமுமாக விவசாயப் பணிகள் மும்முரத்தில் இருக்கும்போது அந்த வயல்வெளியிலும் மெல்லிய அளவில் ஒரு வீணை இசை அவர்கள் காதை வருட ஆரம்பித்தது. எங்கிருந்து வருகிறது… எப்படி வருகிறது…. யார் வாசிக்கி றார்கள் என்பதுகூடத் தெரியாதவர்களாய் வயல்வெளியில் சேற்றுக்கால்களோடு நான்கு பக்கமும் பார்த்தனர். அற்புதமான ராகம்… அது அமிர்தவர்ஷினி என்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதன் எதிரொலியோ, இல்லை தற்செயலாகவோ வானின் வடகிழக்கு மூலையில் மழை மேகக்கூட்டம் தெரிந்தது. அதுவும் திருவாரூர் தேர் திகுதிகு வென இழுக்கப்பட்டு வருகிறாற்போல வந்தபடி இருந்தது.சிறிது நேரத்திலேயே அடித்துப் பெய்ய ஆரம்பித்துவிட்டது மழை.
Reviews
There are no reviews yet.