Siva Rahasyam
சிவ ரகசியம்
‘சிவம் என்றால் மங்களம்’ என்பது பொதுவான பொருள். ஆனால், உண்மையில் சிவன் என்றால் ‘உயிர்’ என்பதே சூட்சுமப் பொருள். சிவன் கோவிலுக்குப் போகிறேன், சிவனை வழிபடப்போகிறேன் என்றால், உயிரின் மூலத்தை தேடிப்போகிறேன், உயிரை உணரப் போகிறேன் என்பதே பொருளாகும்.
அந்த உயிரை உணரத் தொடங்கி விட்டால் பிறகு உடம்பு ஒரு பொருட்டே இல்லை. உடம்பை என்ன வேண்டு மானாலும் செய்யலாம். ஒரு குரங்காட்டி தன் குரங்கை ஆட்டி வைப்பது போல ஆட்டிவைக்கலாம்.
உயிர் மூலத்தை உணர முடிந்தவரை சித்தன் என்கிறோம். அதனால் தான் ஒரு சித்தனுக்கு நீரில் நடப்பதும் காற்றில் மிதப்பதும், கூடுவிட்டு கூடு பாய்வதும் சாதாரண ஒரு சாகசமாகிறது!
Reviews
There are no reviews yet.