Sivamayam Part 1
சிவமயம் பாகம் 1
சிவாய நம என்று சொல்லி தொடங்கு கிறேன். வீர சைவர்களுக்கு எங்கும் எதிலும் சிவமே நிரம்பி இருப்பதால் அனைத்தையுமே அவர்கள் சிவமயமாகப் பார்க்கின்றனர். அப்படி அவர்கள் கருதிடும் சிவமயமே நீங்கள் வாசிக்கப் போகும் இந்த ஆன்மிக நாவலுக்கும் தலைப்பாகி விட்டது.
இந்த நாவலுக்கு ‘சிவமயம்’ என்கிற தலைப்பை சூட்டியவர் பிரபல திரைப்பட நடிகை ராதிகா அவர்கள். அவர் தான் இக்கதையை சன் டி.வி.யில் தொலைக்காட்சி தொடராக தயாரித்தவர். நான் எவ்வளவோ தொலைக்காட்சி தொடர்களுக்கு கதை எழுதி திரைக்கதை அமைத்து வசனமும் எழுதியுள்ளேன். ஆனால் அவைகளில் ஏற்படாத ஒரு நிறைவு எனக்கு இந்த சிவமயத்தில் ஏற்பட்டது. இத்தனைக்கும் இதில் Fantasy எனப்படும் நம்பிக்கை வைத்து ஏற்கவேண்டிய விஷயங்கள் மிக அதிகம். இதை ஒரு யதார்த்த வகை நாவல் இலக்கியத்தோடு சேர்க்க முடியாது.
இதற்கான கதையை ஒரு one line ஆக யோசித்து அதை செரிவுடன் எழுத நான் முனைந்த போது பெரும் வெள்ளத்தில் அகப்பட்ட ஒரு மரக்கிளை போல நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். பெரும்பாலும் கதையை வளர்க்கும்
Reviews
Clear filtersThere are no reviews yet.