Srirangathu Devathaigal
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். ‘நேட்டிவல் ப்ளேஸ்’ என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு எனக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் தொடர்பு எதுவுமே இல்லாவிட்டாலும் அதனுடன் ஒரு பிணைப்பு இருக்கிறது.
இந்தப் புத்தகத்தின் கதைகளில் சம்பவங்கள் அனைத்தும் என் சிறு வயதில் நிகழ்ந்தவை.
எந்தக் கதாசிரியனும் நிஜத்தை அப்படியே எழுதமாட்டான். கோர்ட் உபத்திரவங்களை நீக்கிவிட்டாலும் அப்பட்டமான நிஜம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஜோடனைகள் தேவையாகத்தான் இருக்கின்றன. எனவே இந்தக் கதைகளில் கற்பனைச் சம்பவங்கள் கல்ந்துதான் இருக்கின்றன. கவலையின் விகிதாச்சாரம் என் தொழில் ரகசியம். அதுமுக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை. முக்கியமாக நான் கருதுவது, சம்பவங்களை நோக்கி விவரிப்பவனின் அறியாமைதான்.
Reviews
There are no reviews yet.