Thalapathi
தளபதி
வாய்ச்சுப் போச்சு. வாழ்ந்துதான் ஆகணும். நான் உனக்கு வக்காலத்து வாங்கி அங்க அம்மா கிட்ட பேசிட்டு வாரேன். என்ன இருந்தாலும் பெண்டாட்டின்னு எங்கம்மா இருக்கிற வரை, நீ இப்படியெல்லாம் தறிகெட்டு நடக்கிறது நல்லால்லை. ஆமா, சொல்லிட்டேன். “செல்வராசு, என்னோட வேதனை உனக்குப் புரியலை. வீட்டுக்கு வந்தா எனக்கு நிம்மதி இல்ல. நான் போற வழி தப்புதான். ஆனாலும், அதுல கொஞ்சம் நிம்மதியும், சந்தோஷமும் இருக்கறதால், மனசு துணிஞ்சுட்டது. இதுவரைக்கும் உங்கம்மா எனக்கு பெண்டாட்டியா இருந்ததில்லை. இந்த முப்பது வருஷமா எனக்கு அவ புருஷனாத்தான் இருந்திருக்கிறா. அதெல்லாம் உனக்குத் தெரியல.” காத்தமுத்து பெருமூச்சு விட்டார்.“அதெல்லாம் நீ என்னதான் சொன்னாலும், இப்ப நீ நடந்துக்கற வழிமுறை சரியில்லை. இதெயெல்லாம் விட்டுடு. ராத்திரி மரியாதையா, ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேரு. ராத்திரி நீ வரலை, அறுவாளோட நான் சரஸ்வதி வீட்டுக்கு வர வேண்டியிருக்கும். என்னை வீணா ஒரு கொலையை செய்ய வைக்காதே. ஆமா, சொல்லிட்டேன்.”காத்த முத்து விக்கித்துப் போய் நிற்க செல்வராசு விடுவிடுவென்று வெளியேறி நடந்தான்.
Reviews
Clear filtersThere are no reviews yet.