Thavam
தவம்
காலம் சென்ற எழுத்தாளர் அநுத்தமா என்ற ராஜேஸ்வரி, காஞ்சி மகாசுவாமிகளின் பக்தை. பத்மநாபனை 12 வயதிலேயே கரம் பிடித்தவர். மாமனார் தன் மகளாகக் கருதி பாசம் காட்டினார். மருமகள் எழுதத் தொடங்கிய போது ஆதரவு கொடுத்தவர் மாமனார் தான். ‘அநுத்தமா’ என பெயர் சூட்டியவரும் அவரே.
லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் அநுத்தமா என்பதும் ஒன்று. மாமனாரிடம் கல்வி கற்ற அநுத்தமாவின் ஆங்கிலப் புலமை பாரமானது. எழுத்தாளர் தி.ஜானகிராமன் காலமான போது, சென்னை தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் இரங்கல் கூட்டம் நடத்தியது.
அதில் தி.ஜானகிராமனின் ரசிகர்களான ஆங்கிலேயர்கள் சிலரும் பங்கேற்றனர். அப்போது சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், தீபம் நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் முன்னிலையில் அநுத்தமா ஆங்கிலத்தில் பேசினார். ‘மணல் வீடு, நைந்த உள்ளம், தவம், நல்லதோர் வீணை, வேப்பமரத்துப் பங்களா, அங்கயற்கண்ணி’ நாவல்களை எழுதி வாசகர் களின் பேரன்பைப் பெற்றவர் அநுத்தமா.
ஒரு நாவல் மூலம் மகாசுவாமிகளின் மனதிலும் இடம் பிடித்தார். அந்த நாவல் ‘கேட்டவரம்’. கேட்டவரம் பாளையம் என்னும் ஊரிலுள்ள பஜனை சம்பிரதாயம் பற்றிப் பேசும் படைப்பு அது. அநுத்தமாவை அழைத்து பாராட்டினார் சுவாமிகள். அப்போது அவர் அடைந்த மனநிறைவுக்கு அளவில்லை.
Reviews
There are no reviews yet.