Udal Porul Aanandhi
உடல் பொருள் ஆனந்தி
இந்த நாவல் நம் கற்பனை திரையில் உருவகப்படுத்திக்கொள்ளும் வகையில், திரைக்கதை பாணியில் அமைந்துள்ளது. நாவல் ஒரு மழைக்காலத்தில், ராமநாதனின் மனதில் ஏற்படும் மோதல்களை பிரதிபலிப்பது போல இடியும், மின்னலும், சூறாவளியும் நிறைந்த இரவில் தொடங்குகிறது.
ராமநாதன் திலீபனை கொல்ல புறப்படுகின்றான். வழியில் அவன் தாயார் மீனாக்ஷி அம்மாளையும், காதலி சீதாவையும் பார்த்து குற்ற உணர்வில் புழுங்கியபடி காரியத்தில் இறங்குகின்றான். அதே நேரத்தில் ஆஸ்பித்திரியில் அடைக்கப்பட்டிருக்கும் திலீபன் டாக்டரை கெஞ்சி, கொஞ்சி, தப்பிக்க முயற்சிக்கிறான்.
ஜாவரின் இந்த பாணி நம்மில் ‘சரியான நேரத்தில் ராமநாதன் போவானா? ராம்நாதன் ஏன் இப்படி செய்கிறான்? பிறகு என்ன நடக்கும்?’ என்று பல கேள்விகள் எழுப்புகின்றன. அதை ஃப்ளாஷ் பேக் முறையில் விவரித்து, புயலுக்கு பின்பு அமைதிபோல, இயல்பான கதைக்குள் இழுத்துக்கொண்டு போகின்றார். மொத்தத்தில் திரைப்படத்தில் பெயர் போடும் முன்பாக ஒரு பரபரப்பான துவக்கம் போல அட்டகாசமாக ஆரம்பிக்கிறது கதை.
Reviews
There are no reviews yet.