Vaazhum, Anbu, Magilchi
வாழ்வு, அன்பு, மகிழ்ச்சி
சாத்தியமேயில்லாத ஒன்று வாழ்வு. அது அப்படி இருக்கக் கூடாது, ஆனால் அது அப்படித்தான். தாம் இருப்பதும், மரங்கள் இருப் பதும், பறவைகள் இருப்பதும் ஓர் அற்புதமே. அது உண்மையிலேயே ஓர் அற்புதம் தான்.
ஏனெனில், இந்த முழு பேரண்டமும் இறந்து கிடக்கிறது. கோடான கோடி நட்சத்திரங்களும். கோடான கோடி சூரியக் குடும்பங்களும் இறந்து போய் விட்டன. இந்தப் பூமியில் மட்டும்தான் ஒப்பிட்டு பார்க்கையில் தூசி அளவே உள்ள, ஒன்றுமேயில்லை என்று சொல்லும் அளவிலான சிறு கிரகமான இதனுள்தான் வாழ்க்கை நிகழ்கிறது. இந்த அகண்ட பிரபஞ்சத்தி னுள்ளேயே மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த இடம் இது.
பறவைகள் பாடுகின்றன. மரங்கள் வளர் கின்றன. மலர்கின்றன, மக்கள் வசிக்கின்றனர். அன்பு காட்டுகின்றனர், பாடுகின்றனர். ஆடு கின்றனர். நம்ப முடியாத ஒன்று நிகழ்ந்துள்ளது.”
Reviews
There are no reviews yet.